திருவாசகம் மலர்ந்த திருநாள்

திருவாசகம் மலர்ந்த திருநாள் இன்று 25-6-2020 – மணிவாசகர் முத்தி திருநாள்.

மணிவாசகப் பெருமான் தங்கியிருந்த திருமடத்திற்கு சிவபெருமான் வந்து மணிவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் தன் திருக்கரத்தால் எழுதிய திருவாசகம் மலர்ந்த திருநாள் இன்று 25-6-2020 வியாழக்கிழமை இரவு மற்றும் நாளை ஆனி மகம் மணிவாசகப் பெருமான் தில்லையில் இரண்டறக் கலந்த முத்தி திருநாள்.

நாமும் இன்று இரவு திருவாசகம் பாடி ஈசனின் திருவருளும் மணிவாசகப் பெருமானின் குருவருளும் பெறுவோமாக